சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறேனா? பிரியா வாரியர் விளக்கம் + "||" + Do I act in the role of Sridevi? Priya Warrior interpretation

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறேனா? பிரியா வாரியர் விளக்கம்

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கிறேனா? பிரியா வாரியர் விளக்கம்
‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் பாடல் காட்சியில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரெய்லர் வெளியாகி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதுபோல் உள்ளதாக சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

டிரெய்லரில் ஸ்ரீதேவி என்ற பெயரில் பிரியா வாரியர் நடிகையாக வருகிறார். சிகரெட் பிடிக்கிறார். மது அருந்துகிறார். ஒரு கட்டத்தில் கதறி அழுகிறார். பின்னர் குளியல் தொட்டியில் இறந்த பெண்ணின் இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிவதுபோல் டிரெய்லர் முடிகிறது.  

துபாய் ஓட்டல் குளியல் அறையில் இறந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் தயாராகி இருப்பதாக பேசப்படுகிறது. இதனால் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அதிர்ச்சியாகி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போனிகபூர் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று ஸ்ரீதேவி பங்களா படத்தின் இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி தெரிவித்து உள்ளார். 

இந்த நிலையில் படம் குறித்து பிரியா வாரியர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘ஒரு பெண் சூப்பர் ஸ்டார் பற்றிய கதைதான் இந்த படம். நான் பெண் சூப்பர் ஸ்டாராக நடித்து இருக்கிறேன். இது யாருடைய கதையும் அல்ல. கற்பனை கதை. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த மாதம் இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரியா வாரியரை முந்திய நூரின்
ஒரு அடார் லவ் பட நாயகி பிரியா வாரியரை அவருடன் நடித்த நடிகை நூரின் முந்தினார்.
2. புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுப்பு : சினிமாவை விட்டு பிரியா வாரியர் விலகலா?
‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை.
3. கண் சிமிட்டல் மூலம் பிரபலம் : இந்தி படத்தில் பிரியா வாரியர்
புருவ அசைவு மற்றும் கண்சிமிட்டல் மூலம் இந்திய பட உலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் பிரியா வாரியர்.
4. ஸ்ரீதேவி பங்களாவில், பிரியா வாரியர்!
சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவைளுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் உடனே சம்மதம் சொல்லவில்லை. பட வாய்ப்புகளை ஏற்க தயங்கினார். டைரக்டர் மற்றும் பட அதிபரை சந்திக்க அவர் மறுத்து விட்டார். இது, 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கதை.
5. 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியா வாரியர்!!
2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா வாரியர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.