சினிமா செய்திகள்

பாக்யராஜ் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ 2–ம் பாகம் தயாராகிறது + "||" + Bhagyaraj is directing 'Chinna veedu' Part 2 is preparing

பாக்யராஜ் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ 2–ம் பாகம் தயாராகிறது

பாக்யராஜ் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ 2–ம் பாகம் தயாராகிறது
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளை பெற்றவர்.
பாக்யராஜ் இயக்கத்தில் ‘சித்து பிளஸ்–2’ படம் 2010–ல் வெளிவந்தது. இதில் அவரது மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்து இருந்தார். 

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். சின்ன வீடு படம் 1985–ல் வெளியானது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார். 

விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த படம் மையப்படுத்தி இருந்தது. சின்ன வீடு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மற்ற நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.