சினிமா செய்திகள்

அடுத்த மாதம் 18 படங்கள் ரிலீஸ் : தியேட்டர் ஒதுக்குவதில் இழுபறி + "||" + Next month is the release of 18 films

அடுத்த மாதம் 18 படங்கள் ரிலீஸ் : தியேட்டர் ஒதுக்குவதில் இழுபறி

அடுத்த மாதம் 18 படங்கள் ரிலீஸ் : தியேட்டர் ஒதுக்குவதில் இழுபறி
புதிய படங்களை திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து தணிக்கையான படங்களுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்து கொடுத்து வந்தது.
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி அதிக படங்களை திரையிட்டு கொள்ளலாம் என்று விதியை தளர்த்தியது. 

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 பெரிய படங்கள் 1000–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரைக்கு வந்ததால் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் வெளியீட்டை தள்ளி வைத்தன. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட புதிய படங்களை அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர பட அதிபர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இந்த பட்டியலில் தேவ், வந்தா ராஜாவாதான் வருவேன், பேரன்பு, சர்வம் தாளமயம், களவாணி–2, கண்ணே கலைமானே, கழுகு–2. 100 பர்சன்ட் காதல், புமராங், வர்மா, ஐங்கரன், திருமணம், தாதா 87, பஞ்சாட்சரம், வாண்டு, அக்னி–தேவி, சகா, பொதுநலன் கருதி ஆகிய 18 படங்கள் உள்ளன. 

இந்த 18 படங்களும் 28 நாட்களில் வெளியாவதால் அவற்றுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் இழுபறி நிலவுகிறது. இவற்றில் தேவ் படத்தில் கார்த்தியும், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவும், பேரன்பு படத்தில் மம்முட்டியும் நடித்துள்ளனர். ‘திருமணம்’ படம் சேரன் இயக்கத்திலும், வர்மா படம் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க பாலா இயக்கத்திலும் உருவாகி உள்ளன. சர்வம் தாளமயம்  படம் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகி உள்ளது.