சினிமா செய்திகள்

அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி? –நடிகர் விஷால் + "||" + How did love romance with Anisha? - Actor Vishal

அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி? –நடிகர் விஷால்

அனிஷாவுடன் காதல்  மலர்ந்தது  எப்படி? –நடிகர் விஷால்
நடிகர் விஷாலுக்கும், அனிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. அனிஷா, ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி–சவீதா தம்பதியின் மகள் ஆவார்.
தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தில் சில காட்சிகளில் நடித்து இருந்தார். இந்த படம்தான் தமிழில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் தயாராகி வருகிறது. பெல்லி சூப்புலு படத்திலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில் அனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து விஷால் அளித்த பேட்டி வருமாறு:–

நான் அயோக்யா என்ற படத்தில் விசாகப்பட்டினத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது சிலர் என்னை சந்தித்தனர். அந்த குழுவில் அனிஷாவும் இருந்தார். பெண்கள் இணைந்து ‘மைக்கேல்’ என்ற ஆங்கில படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் அனிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அபூர்வா இயக்குகிறார் என்றும் தெரிவித்தனர். 

அந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் எடுக்கும் படத்தின் கதையும் விவசாயத்தை மையப்படுத்தி இருந்தது. கதை எனக்கும் பிடித்து இருந்தது. அதனால் அந்த படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறினேன். 

அந்த சந்திப்பில்தான் அனிஷா எனக்கு அறிமுகமானார். பார்த்ததும் பிடித்துப்போனது. அவரை கடவுள் என்னிடம் அனுப்பியதாக உணர்ந்தேன். பிறகு நட்பாக பழகினோம். ஒரு கட்டத்தில் நான்தான் முதலில் காதலை அவரிடம் சொன்னேன். அனிஷா உடனே பதில் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். சந்தோ‌ஷப்பட்டேன். 

அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று அவருக்கு தடை போட மாட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு எங்கள் திருமணம் நடக்கும். அதுவரை காத்திருப்பதாக அனிஷா தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு விஷால் கூறினார்.