சினிமா செய்திகள்

முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்? + "||" + Rajinikanth as police officer in Murugadoss's film?

முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?

முருகதாஸ் படத்தில் போலீஸ்  அதிகாரியாக  ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
ரஜினிகாந்தின்  புதிய  படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது உறுதியாகி உள்ளது. இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, 7–ம் அறிவு, கத்தி, சர்கார் போன்ற படங்கள் எடுத்து முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

முந்தைய படங்களில் விவசாயிகள் பிரச்சினை, அரசியல்வாதிகளின் ஊழல், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் படத்திலும் அரசியல் இருக்கும் என்றும், படத்துக்கு நாற்காலி என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் படத்துக்கு நாற்காலி என்ற பெயர் வைக்கவில்லை என்று முருகதாஸ் மறுத்துள்ளார். 

புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ‘கொடி பறக்குது’ படத்தில் உதவி கமி‌ஷனராகவும், ‘பாண்டியன்’ படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், ‘மூன்று முகம்’ படத்தில் டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியனாகவும் நடித்து இருந்தார். 

‘பேட்ட’ படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார்- சத்திய நாராயணன்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்திய நாராயணன் கூறினார்.
2. செல்போனில் படம்பிடிப்பதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பார்வையாளர்களுக்கு தடை
ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது வழக்கம். கபாலி படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தியபோது அங்கும் பெரும்கூட்டம் கூடியது.
3. இணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
மும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.
4. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
5. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.