சினிமா செய்திகள்

ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + Rajini - Patta- Ajith - Vishwavam official announcement of the additional collection

ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை

ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்ற நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது.

சினிமா டிராக்கர்ஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூலில் சக்கை போடு போடுவதாக கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழகத்தில் மட்டும் பேட்ட படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அறிவித்தது.

அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தில் வேகமாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியது. அடுத்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தெரிவித்தது.