சினிமா செய்திகள்

1 லட்சம் பேர் உயிரை விட பணம் முக்கியமா? அனுஷ்கா சர்மாவை விளாசிய ரசிகர்கள் + "||" + Is 1 lakh more cash than life? Anushka Sharma fans

1 லட்சம் பேர் உயிரை விட பணம் முக்கியமா? அனுஷ்கா சர்மாவை விளாசிய ரசிகர்கள்

1 லட்சம் பேர் உயிரை விட பணம் முக்கியமா? அனுஷ்கா சர்மாவை விளாசிய ரசிகர்கள்
பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மா. இவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் அனுஷ்கா சர்மா  நடித்து பரி, சஞ்சு, சுய் தாகா, ஜீரோ ஆகிய படங்கள் வந்தன. ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். புதிதாக புகையிலை விளம்பர படமொன்றில் அவர் நடித்துள்ளார். அந்த விளம்பர வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அனுஷ்கா சர்மாவை கடும் கோபத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள்.

“நீங்கள் புகையிலையை விளம்பரம் செய்தால் ரசிகர்களுக்கு வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட உங்களுக்கு பணம்தான் முக்கியமா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் ஒரு டாக்டர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“கணவர் விராட் கோலி தீங்கு ஏற்படுத்தும் எதையும் விளம்பர படுத்தமாட்டேன் என்கிறார். மனைவியோ புகையிலை விற்கிறார்” என்று இன்னொருவர் விளாசியுள்ளார். “நீங்கள் நடித்த படங்களை பார்த்து உங்களை எனக்கு பிடித்தது. ஆனால் புகையிலை விளம்பரத்தில் உங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று மற்றொருவர் சாடியுள்ளார்.