சினிமா செய்திகள்

ஹாலிவுட் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல் + "||" + Hollywood films: fans expecting Spider-Man, Captain Marvel

ஹாலிவுட் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல்

ஹாலிவுட் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல்
சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
பேட்மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பேந்தர், அயன் மேன், தார், ஹல்க், ஒண்டர் உமன், ஆண்ட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், சமீபத்தில் வெளியான அகுவாமேன் உள்பட 20-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் வந்துள்ளன. இவை வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன.

இந்த வரிசையில் ‘கேப்டன் மார்வெல்’ படம் மார்ச் 8-ந் தேதியும், ‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் ஏப்ரல் 26-ந் தேதியும் திரைக்கு வருகிறது. ‘ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்’ படம் ஜூலை 5-ந் தேதி வெளியாகிறது. கேப்டன் மார்வல் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. இப்போது கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேப்டன் மார்வல் கதாபாத்திரத்தில் பிரை லார்சன் நடித்துள்ளார். சாமுவேல் ஜாக்சன், ஜுட் லா, பென் மெண்டல்சன், லீபேஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அனா பாடன், ரைன் பிளேக் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

‘ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம்’ படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். கடந்த 2017-ல் வெளியான ஸ்பைடர் மேன் படத்தில் மைக்கேல் ஹீட்டன் வில்லனாக வந்தார். புதிய படத்தில் வில்லனாக ஜேக் ஜில்லன்ஹால் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார்.

‘அவஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் ராபர்ட் டோனி ஜூனியர், கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், ஹிரிஷ் எவெனஸ், மார்க் ரெபெல்லோ ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...