சினிமா செய்திகள்

விஜய் படத்தில் 3 கதாநாயகிகள்? + "||" + 3 heroines in Vijay's film

விஜய் படத்தில் 3 கதாநாயகிகள்?

விஜய் படத்தில் 3 கதாநாயகிகள்?
விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. ரூ.250 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் ஈட்டியதாகவும் கூறப்பட்டது.
சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இது விஜய்க்கு 63-வது படம் ஆகும்.

இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர். அட்லி படங்களில் 2, 3 கதாநாயகிகள் இருப்பது வழக்கம். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். மேலும் 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. விவேக், பரியேறும் பெருமாள் படத்தில் பிரபலமான கதிர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராவதாகவும் பேசப்படுகிறது. சமீபத்தில் வெளியான தனுசின் வட சென்னை உள்பட சில படங்கள் வட சென்னையை கதைக்களமாக வைத்து வந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
சென்னையில், நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2. நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து
சென்னையில், நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
3. தேர்தலில் விஜய் படம், கொடியை பயன்படுத்த தடை
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
4. விஜய் படத்தில் மற்றுமொரு கதாநாயகி
‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
5. விஜய்-63, படத்தின் கதை கசிந்ததா?
நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு.