சினிமா செய்திகள்

‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய் + "||" + Vijay who praised the film 'KGF'

‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்

‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்
கே.ஜி.எப். படக்குழுவினரை நடிகர் விஜய் பாராட்டி உள்ளார்.
கர்நாடகாவில் மிகப் பெரிய வெற்றி பெற்ற கன்னட படம், ‘கே.ஜி.எப்.’ இந்த படத்தில், யஷ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர், எந்த பின்னணியும் இல்லாமல் திரையுலகுக்கு அறிமுகமாகி வெற்றி பெற்றவர். கன்னட பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ புனித்ராஜ்குமாருக்கு அடுத்தபடியாக இவருடைய ‘மார்க்கெட்’ அந்தஸ்து இருப்பதாக கூறப்படுகிறது. யஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘கே.ஜி.எப்.’ என்ற படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான ‘கே.ஜி.எப்.’, வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ வெளியிட்டது. சிறப்பான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை நடிகர் விஜய் பார்க்க விரும்பினார். அவருக்காக சென்னையில் பிரத்யேகமாக படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த விஜய், ‘கே.ஜி.எப்.’ படம் எடுக்கப்பட்ட விதம் பிரமாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளதாக பாராட்டினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விஜய்யின் பாராட்டை பெற்ற ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினர், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டதாக கூறினார்கள்.