சினிமா செய்திகள்

இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள் + "||" + Rajinikanth-Kamalhasan will attend the Ilayaraja funtion

இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்

இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்
இளையராஜா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

“இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்வது உறுதி” என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வருகிற பிப்ரவரி 2, மற்றும் 3 தேதிகளில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விழா நடைபெற இருக்கிறது. இதற்காக விழா குழு அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களை விழா குழுவினர் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர்கள் நந்தா, மனோபாலா ஆகியோர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்கள். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்.

இதே போல் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவரும் வருவதாக கூறியிருக்கிறார்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.