சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார் + "||" + Sexual harassment: Suhra Bhaskar complained to the director

பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார்

பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார்
பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடித்து இந்தியில் ராஞ்சனா, தமிழில் அம்பிகாபதி பெயர்களில் வெளியான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மீ டூவில் நடிகைகள் பாலியல் புகார் சொல்லி வரும் நிலையில் சுவரா பாஸ்கர் தனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டது. ஆனால் அது பாலியல் சீண்டல் என்பதை தெரிந்து கொள்ள 8 ஆண்டுகள் ஆகி உள்ளது. பாலியல் சீண்டல்களை உணர நமது கலாசாரம் கற்றுக் கொடுக்கவில்லை. வேலை பார்த்த இடத்தில் ஒரு இயக்குனர் தவறாக என்னை அணுகினார். ஆனாலும் என்னை தொடுவதற்கு அவரை அனுமதிக்கவில்லை. சுதாகரித்துக் கொண்டு விலகி விட்டேன்.

தவறான தொடுதல் குறித்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அவசியம். அதுகுறித்து சொல்லி கொடுக்க வேண்டும். சகித்துக்கொண்டு போவது என்பது பாலியல் சீண்டல்களை கண்டுகொள்ளாமல் செல்ல வழி வகுத்து விடும். இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இந்த பாலியல் தொல்லைகள் நடக்கிறது.

அதுதொடர்பான ஒவ்வொரு அசைவையும் தெரிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் பெண்கள், இந்த சமூகம் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் என்று அச்சத்தில் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். கலாசாரத்தில் மாற்றம் வேண்டும். பாதிப்பை பெண்கள் தைரியமாக வெளிப்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்.” இவ்வாறு சுவரா பாஸ்கர் கூறினார்.