சினிமா செய்திகள்

அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம் + "||" + Petta played in government bus - Actor Vishal denounced

அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்

அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்
அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் ஒளிபரப்பிய சம்பவதிற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக புதிய படங்களை, திரைக்கு வந்ததுமே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகின்றனர். இதனால் வசூல் பெருமளவு பாதிக்கிறது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம், திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்தும் பயன்இல்லை.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி திரைக்கு வந்த ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய படங்களை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டில் தடை பெற்று இருந்தனர். அதையும் மீறி படம் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் முழு படமும் இணையதளத்தில் வெளியானது. ஏராளமானோர் அதை பதிவிறக்கம் செய்து பார்த்தனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பேட்ட படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து ஒரு அரசு பஸ்லில் ஒளிபரப்பி உள்ளனர். அந்த வீடியோ காட்சியை பஸ்சில் பயணம் செய்த ரஜினி ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமாகி சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து உள்ளார். “அரசு பஸ்களில் திருட்டுத்தனமாக படங்களை ஒளிபரப்புவது இந்த வீடியோ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டி- ராக்லேண்ட் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
ஊட்டி- ராக்லேண்ட் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
2. அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு, மாணவ, மாணவிகள் மறியல்
மணப்பாறையில் அரசு பஸ்களில் ஏற்ற மறுத்ததால் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
3. மஞ்சூர்- கோவை சாலையில், அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகளால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016–ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர்.
5. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.