சினிமா செய்திகள்

ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம் + "||" + Nayantara in pairs: Vijay's 63rd shooting start

ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்

ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்
விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் விஜய், அட்லி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விவேக், ஆனந்தராஜ், பரியேறும் பெருமாள் கதிர் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். பூஜையில் டேனியல் பாலாஜி பங்கேற்றார். எனவே அவர் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் 2 கதாநாயகிகள் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இதில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன
மும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.
2. இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா படங்கள் - படக்குழுவினர் அதிர்ச்சி
இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரின் படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3. நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை பழிதீர்த்துவிட்டனர் தி.மு.க. மீது அமைச்சர் குற்றச்சாட்டு
நடிகை நயன்தாரா விவகாரத்தை வைத்து ராதாரவியை தி.மு.க. பழிதீர்த்துவிட்டது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டினார்.
4. பத்திரிகை நிருபர்-கிராமத்து பெண்ணாக இரட்டை வேடங்களில், நயன்தாரா
நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ஐரா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை டைரக்டு செய்திருப்பவர், சர்ஜுன்.
5. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சைக்குரிய பேச்சு; சின்மயி, விக்னேஷ் சிவன் கண்டனம்
நயன்தாரா குறித்த ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சின்மயி, விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.