சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா + "||" + Vijay Antony movie 9 students Ilayaraja made the song

விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா

விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழாவை பல கல்லூரிகளில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அடுத்த மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலை விழாவை நடத்துகிறது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பிற மாநில நடிகர்களும் பங்கேற்க உள்ளனர். சமீபத்தில் ராணிமேரி, எத்திராஜ் கல்லூரிகளில் நடைபெற்ற விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது அவர் முன்னிலையில் பல மாணவிகள் பாடல்களை பாடி அசத்தினார்கள்.


அந்த மேடையிலேயே மாணவிகள், இளையராஜாவிடம் எங்களை சினிமாவில் பாட வைக்க முடியுமா? என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை இளையராஜா ஏற்றுக்கொண்டு சிறப்பாக பாடிய 9 மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

தற்போது அந்த மாணவிகளை விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்தில் பாட வைத்து பாடகி களாக அறிமுகப்படுத்தி உள்ளார். பாடல் பதிவு அவரது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த படத்தை யோகேஸ்வரன் இயக்குகிறார். எஸ்.என்.எஸ். பிலிம்ஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கிறார்.