சினிமா செய்திகள்

கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை + "||" + Kamal Haasan is the opposite In Delhi The actress has hit farheen Robbery

கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை

கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை
1993-ல் திரைக்கு வந்த கலைஞன் படத்தில் பிந்தியா என்ற பெயரில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார்.
சென்னையை சேர்ந்த பிரபல நடிகை பர்ஹீன். இவர் 1993-ல் திரைக்கு வந்த கலைஞன் படத்தில் பிந்தியா என்ற பெயரில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் சில தமிழ் படங்களில் நடித்தார். இந்தியில் பர்ஹீன் என்ற பெயரில் ‘ஜான் தேரே நாம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.


மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பர்ஹீன் தற்போது டெல்லியில் உள்ள சர்வ்பிரியா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பர்ஹீன் டெல்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்த சிலர் சிக்னலில் நின்றிருந்த பர்ஹீனின் கார் கண்ணாடியை அடித்து உடைக்க முயன்றனர். இதனால் கோபமான பர்ஹீன் காரை ரோட்டு ஓரம் நிறுத்தி அவர்களை கண்டித்தார். அப்போது அந்த கும்பல் காரில் இருந்த ரூ.16 ஆயிரம், மொபைல் போன், மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

அவர்களை பர்ஹீன் தடுத்து நிறுத்தி உதவிக்கு ஆட்களை அழைத்தார். உடனே அவர்கள் பர்ஹீனை சரமாரியாக அடித்து தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். பர்ஹீன் ரோட்டில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்த ராணுவ வீரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா உதவியோடு தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் சிக்னலில் காரை நிறுத்துபவர்கள் கவனத்தை திருப்பி கொள்ளையடிக்கும் ‘தக் தக்’ கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.