சினிமா செய்திகள்

மம்முட்டி நடித்த ‘பேராசிரியர் சாணக்யன்’ + "||" + perasiriyar chanakyan

மம்முட்டி நடித்த ‘பேராசிரியர் சாணக்யன்’

மம்முட்டி நடித்த ‘பேராசிரியர் சாணக்யன்’
‘மாஸ்டர் பீஸ்’ என்ற மலையாள படத்தில், மம்முட்டி பேராசிரியராக நடித்து இருக்கிறார்.
சாணக்யன் போன்ற பேராசிரியர்கள் கிடைத்தால், நம் மாணவர்களில் இருந்து 1,000 அப்துல்கலாமை உருவாக்கலாம்” என்ற கருவை அடிப்படையாக வைத்து, ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மலையாள படம் தயாராகி இருக்கிறது. அதில், மம்முட்டி பேராசிரியராக நடித்து இருக்கிறார்.

அவருடன் வரலட்சுமி சரத்குமார், பூனம் பாஜ்வா, மகிமா நம்பியார், உன்னி முகுந்தன், சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ரூ.15 கோடி செலவில், சி.எச்.முகமது தயாரித்து இருக்கிறார். அஜய் வாசுதேவ் டைரக்டு செய்திருக்கிறார். படம், கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்த படம் தமிழில் உருவாகிறது. தமிழ் படத்துக்கு ‘பேராசிரியர் சாணக்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. வி.பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். சி.எச்.முகமது தயாரிக்கிறார். படம், அடுத்த மாதம் (பிப்ரவரி) திரைக்கு வர இருக்கிறது.

இதையடுத்து, வி.பிரபாகர் எழுதி இயக்கும் ‘குற்றவாளிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற தமிழ் படத்தை கபில்மோகனுடன் இணைந்து சி.எச்.முகமது தயாரிக்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது”.