சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியீடு + "||" + Actor Rajinikanth is going to walk alone on the Poes estate garden

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பேட்ட.  ரசிகர்களிடையே அதிக வரவேற்பினை இந்த படம் பெற்றுள்ளது.  படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன் உடல்நல சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த டிசம்பரில் அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில், அமெரிக்கா சென்று திரும்பிய அவர் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான பணிகளில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தமது வீடு அமைந்திருக்கும் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  அவர் அதிகாலை வேளையில் சாலையில் யாரும் செல்லாத நிலையில் சிவப்பு நிற காலணியுடன் வேகமுடன் நடந்து செல்கிறார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.  இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.