சர்வதேச பிரச்சினைகளை பேசும் விஜய் சேதுபதியின் புதிய படம்


சர்வதேச பிரச்சினைகளை பேசும் விஜய் சேதுபதியின் புதிய படம்
x
தினத்தந்தி 22 Jan 2019 12:44 PM GMT (Updated: 22 Jan 2019 12:44 PM GMT)

விஜய் சேதுபதி படத்துக்கு படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி புதிய படத்தில் வயலின் வாசிக்கும் இசை கலைஞராக நடிக்கிறார். அவருடன் 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட, மிக அதிக பட்ஜெட்டில், இந்த படம் தயாராகிறது.

‘பேராண்மை,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களில் டைரக்டர் ஜனநாதனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

“கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய படம், இது. சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினையை பற்றி படம் பேசும். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. படத்துக்காக, 150 வருட பழமை வாய்ந்த பிரமாண்டமான கிறிஸ்தவ ஆலயம் போன்ற அரங்கு அமைக்கப்படுகிறது.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் அந்த ‘சர்ச்’ செட்டில் படமாக்கப்படும். தொடர்ந்து மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார்.”

Next Story