சினிமா செய்திகள்

படங்களில், நடிகர்கள் பாடலாமா? - ஏ.ஆர்.ரகுமான் + "||" + Can actors singing in movies? - A. R. Rahman

படங்களில், நடிகர்கள் பாடலாமா? - ஏ.ஆர்.ரகுமான்

படங்களில், நடிகர்கள் பாடலாமா? - ஏ.ஆர்.ரகுமான்
படங்களில், நடிகர்கள் பாடுவது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர்கள், படங்களில் பாடுவது வழக்கமாக நடக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், தனுஷ், சிம்பு உள்பட முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் பாடி உள்ளனர். தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலை வெறி பாடலுக்கு விமர்சனங்கள் கிளம்பினாலும் உலகம் முழுவதும் அதிகமானோரால் கேட்கப்பட்டு சாதனை நிகழ்த்தியது.

சிம்பு தனது படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் படங்களிலும் அதிக பாடல்களை பாடி உள்ளார். நடிகைகளும் தற்போது பாட தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர்கள், பாடகர்கள் ஆவது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“திரைப்படங்களில் தங்கள் பாடல்களை நடிகர்கள் பாடும் வழக்கம் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களில் பாடல்களை பாடும் முன்பு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அந்த பயிற்சிக்காக அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.

தற்போது நடிகர்கள் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிப்பதற்கும் நேரம் இல்லை. இந்த நிலையில் பாடலுக்கு பயிற்சி எடுப்பது என்பது சிரமம்தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்து விட்டு பாடல்களை பாட வந்தால் அவர்களது படங்களில் அவர்களே பாடுவது சிறப்பானதாக இருக்கும்.” இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.