சினிமா செய்திகள்

விஜய், அஜித், சித்தார்த்தின் துப்பாக்கி, வேதாளம், பாய்ஸ் 2-ம் பாகங்கள் + "||" + Vijay, Ajith, Siddharth's Thuppakki, Vedhalam, Boys 2nd parts

விஜய், அஜித், சித்தார்த்தின் துப்பாக்கி, வேதாளம், பாய்ஸ் 2-ம் பாகங்கள்

விஜய், அஜித், சித்தார்த்தின் துப்பாக்கி, வேதாளம், பாய்ஸ் 2-ம் பாகங்கள்
விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் வேதாளம், சித்தார்த்தின் பாய்ஸ் ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் பட உலகில் இரண்டாம் பாகம் படங்கள் சீசன் நடக்கிறது. ஏற்கனவே அமைதிப்படை, பில்லா படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சிங்கம் படத்துக்கு 3 பாகங்கள் வெளியானது. கடந்த வருடம் ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகமும் வெளியானது.

சாமி-2, சண்டக்கோழி-2, மாரி-2, கலகலப்பு-2, காஞ்சனா-2, திருட்டுப்பயலே-2, தமிழ் படம்-2 ஆகிய படங்களும் வந்தன. இப்போது கமலின் இந்தியன்-2, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்கள் தயாராகின்றன. அடுத்து விஜய்-காஜல் அகர்வால் நடித்து 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்பேன் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அறிவித்து உள்ளார். துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களில் இணைந்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி-2 படத்திலும் சேர இருக்கிறது. இப்போது ரஜினிகாந்தை வைத்து புதிய படம் இயக்கும் வேலையில் இருக்கும் முருகதாஸ் அந்த படம் வெளியானதும் துப்பாக்கி-2 படத்தை தொடங்குகிறார்.

இதுபோல் அஜித்தின் வேதாளம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வம் உள்ளது என்று இயக்குனர் சிவா கூறியுள்ளார். இந்த படம் 2015-ல் வெளியாகி வசூல் குவித்தது. அதன்பிறகு வீரம், விவேகம், விஸ்வாசம் படங்களிலும் அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்தது. தற்போது போனிகபூர் இயக்கும் 2 படங்களில் நடிக்க அஜித்குமார் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு வேதாளம்-2 தயாராகலாம்.

இதுபோல் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளியான பாய்ஸ் படத்தின் 2-ம் பாகமும் தயாராக உள்ளது. இதனை அந்த படத்தில் நடித்த இசையமைப்பாளர் தமன் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த துப்பாக்கி - தோட்டாக்களை வீட்டில் பதுக்கிய பெண் - கைது செய்து தீவிர விசாரணை
இலங்கைக்கு கடத்து வதற்காக துப்பாக்கி, 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
2. பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு நடிகர் விஜய் மோதிரம் பரிசு
‘பிகில்’ படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
3. துப்பாக்கி விற்பனை சோதனைகள் குறித்து பேச்சுவார்த்தை ; டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துப்பாக்கி விற்பனை சோதனைகள் குறித்து தீவிரமான விவாதங்கள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
4. இதுவரை இல்லாத வியாபாரம்!
விஜய்யை வைத்து அட்லீ டைரக்டு செய்த ‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தன.
5. அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் அஜித் ரசிகருக்கு கத்தி வெட்டு
சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.