சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் முதல் சூப்பர் ஹீரோ படம், ‘பிளாக் பேந்தர்’ + "||" + The first superhero film on the Oscar Award nomination list

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் முதல் சூப்பர் ஹீரோ படம், ‘பிளாக் பேந்தர்’

ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் முதல் சூப்பர் ஹீரோ படம், ‘பிளாக் பேந்தர்’
2018-ம் ஆண்டுக்கான உயரிய ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி நடக்க உள்ளது.
2018-ம் ஆண்டுக்கான உயரிய ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி நடக்க உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் சிறந்த படத்துக்கான பரிந்துரை பட்டியலில் சூப்பர் ஹீரோ படமான ‘பிளாக் பேந்தர்’ இடம்பெற்று உள்ளது. ஒரு சூப்பர் ஹீரோ படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். கிரீன் புக், ரோமா, எஸ்டார் இஸ் பார்ன், வைஸ், தி பேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பரிந்துரை பட்டியலில் உள்ளன.

சிறந்த நடிகருக்கான பட்டியலில் கிறிஸ்டியன் பேல் (படம்: வைஸ்) பிராட்லி கூப்பர் (எ ஸ்டார் இஸ் பார்ன்) ரமி மாலிக் (போஹிமியன் ராப்ஸாடி) ஆகியோர் உள்ளனர். சிறந்த நடிகைக்கான பிரிவில் யாலிட்ஸா அபாரிசியோ (படம்: ரோமா) கிளென் க்ளோஸ் (தி வைப்) ஒலிவியா கோல்மேன் (தி பேவரிட்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஸ்பைக் லீ (படம்: பிளாக்கிளான்ஸ்மேன்) வெல்பவ்விகோஸ்கி (கோல்ட் வார்) யோர்கோஸ் லந்திமோஸ் (தி பேவரிட்) அல்போன்ப்ஸா குவரோன் (ரோமா)ஆடம் மெக்கே (வைஸ்) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.