சினிமா செய்திகள்

‘ஜிப்ஸி’ படத்துக்காக “இந்தியா முழுவதும் பயணம் செய்தேன்” நடிகர் ஜீவா பேச்சு + "||" + I traveled all over India "actor Jeeva talk

‘ஜிப்ஸி’ படத்துக்காக “இந்தியா முழுவதும் பயணம் செய்தேன்” நடிகர் ஜீவா பேச்சு

‘ஜிப்ஸி’ படத்துக்காக “இந்தியா முழுவதும் பயணம் செய்தேன்” நடிகர் ஜீவா பேச்சு
ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படத்தின் கதாநாயகன் ஜீவா, டைரக்டர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார், பாடல் ஆசிரியர் யுகபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் ஜீவா பேசியதாவது:-

“ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றி திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் அப்படி மாறியதன் பின்னணியில், ஒரு காதல் இருக்கிறது. இதுதான் ‘ஜிப்ஸி’யின் கதை. ஒரு வரி கதையாக கேட்டபோதே எனக்கு பிடித்தது. கதையில், ஒரு உண்மை இருந்தது.

மனிதநேயத்தை மதிக்க வேண்டும். இயற்கையையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்க சொல்லும் கதை, இது. இதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். நாகூர், வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்தியா முழுவதும் பயணித்து படமாக்கினோம். அப்போதுதான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதை உணர்ந்தேன். படம் பார்ப்பவர்களும் அதை உணர்வார்கள். படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்து இருக்கிறது. இது, என் கலையுலக பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும்.”

இவ்வாறு நடிகர் ஜீவா பேசினார்.