சினிமா செய்திகள்

நம்பி நாராயணன் படத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியானது + "||" + Madhavan's appearance Released

நம்பி நாராயணன் படத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியானது

நம்பி நாராயணன் படத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியானது
நம்பி நாராயணன் படத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியானது
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபணமாகி விடுவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். நம்பி நாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தது, வழக்கில் சிக்கியது, கைது ஆகியவை படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

இதில் மாதவன் நடிக்கும் வயதான தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. நிஜ நம்பி நாராயணனை பிரதிபலிப்பதுபோல் தோற்றம் உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த படத்தை ஆனந்த் மகாதேவனும், மாதவனும் இணைந்து இயக்குவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் ஆனந்த் மகாதேவன் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் மாதவனே டைரக்டு செய்கிறார். “இந்த படம் எனது இதயத்துக்கு நெருக்கமாகி விட்டது. படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. நம்பி நாராயணன் வாழ்க்கையை உலகத்துக்கு சொல்ல காத்திருக்கிறேன்” என்று மாதவன் கூறியுள்ளார்.