சினிமா செய்திகள்

திருமணம், நடிப்புக்கு முற்றுப்புள்ளியா? -நடிகை ரித்விகா ஆவேசம் + "||" + Actress Ridivika angrily

திருமணம், நடிப்புக்கு முற்றுப்புள்ளியா? -நடிகை ரித்விகா ஆவேசம்

திருமணம், நடிப்புக்கு முற்றுப்புள்ளியா? -நடிகை ரித்விகா ஆவேசம்
கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார்.
கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார். அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒரு நாள் கூத்து, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் ஆகியவை ரித்விகா நடித்த முக்கிய படங்கள். சமீபத்தில் இணையதளத்தில் வெளியான சிகை படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் வந்தார்.

தற்போது எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நேத்ரா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன்-2விலும் வந்தார். இந்த நிலையில் ரித்விகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து உள்ளார் என்றும் தகவல்கள் பரவின.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து வருங்கால கணவர் முடிவு செய்வார் என்று ரித்விகா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது திருமண செய்தியை ரித்விகா சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று தகவல்கள் பரவியது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்” என்று கூறியுள்ளார்.