சினிமா செய்திகள்

நடிகை ஹன்சிகாவுக்கு தரையில் பல்டி அடிக்கும் போது காயம் + "||" + Hansika Motwani gets hurt!

நடிகை ஹன்சிகாவுக்கு தரையில் பல்டி அடிக்கும் போது காயம்

நடிகை ஹன்சிகாவுக்கு தரையில் பல்டி அடிக்கும் போது காயம்
படப்பிடிப்பின் போது நடிகை ஹன்சிகாவுக்கு தரையில் பல்டி அடிக்கும் போது காயம் ஏற்பட்டது.
குட்டி குஷ்பு ஹன்சிகாவை பற்றி தான் இரு தினங்காக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது ஹன்சிகா எடுத்து கொண்ட அந்தரங்க செல்பிக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தனது போனையும், டிவிட்டர் கணக்கையும் யாரோ 'ஹேக்' செய்து விட்டார்கள் என ஹன்சிகா கூறினார். இந்நிலையில் அவரை பற்றிய மற்றொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது "மஹா" படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது ஹன்சிகா காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மஹா" படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சி திங்களன்று படமாக்கப்பட்டது. அப்போது நடிகை ஹன்சிகா தரையில் பல்டி அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, சிறிய காயத்தில் முடிந்தது. முதல் உதவியால் ஹன்சிகாவை அந்த காயத்தில் இருந்து மீண்டார்.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம் "மஹா". இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது திரைப்படமாகும். நாயகியை மையப்படுத்திய கதையில் முதன்முறையாக ஹன்சிகா நடிக்கும் இந்த 'மஹா'வை யூ ஆர் ஜமீல் இயக்குகிறார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்திருக்கிறார்.