சினிமா செய்திகள்

கரை இருக்கும் எல்லைவரை அலை சென்று பாய்வதுபோல தமிழர் இருக்கும் எல்லைதோறும் தினத்தந்தி சென்றுசேர வேண்டும்கவிஞர் வைரமுத்து வாழ்த்து + "||" + The poet Vairamuthu congratulations

கரை இருக்கும் எல்லைவரை அலை சென்று பாய்வதுபோல தமிழர் இருக்கும் எல்லைதோறும் தினத்தந்தி சென்றுசேர வேண்டும்கவிஞர் வைரமுத்து வாழ்த்து

கரை இருக்கும் எல்லைவரை அலை சென்று பாய்வதுபோல தமிழர் இருக்கும் எல்லைதோறும் தினத்தந்தி சென்றுசேர வேண்டும்கவிஞர் வைரமுத்து வாழ்த்து
கரை இருக்கும் எல்லைவரை அலை சென்று பாய்வதுபோல தமிழர் இருக்கும் எல்லைதோறும் தினத்தந்தி சென்றுசேர வேண்டும் கவிஞர் வைரமுத்து வாழ்த்து
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வோர் அதிகாலையிலும் சூரியனுக்கு முன்பே தமிழர்களை எழுப்பிவிடும் தினத்தந்தி 18-ம் பதிப்பாக இலங்கை வரையில் தன் எல்லைகளை நீட்டித்திருக்கிறது என்பது பெருமையும், பெருமகிழ்வும் தருவதாகும். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள் இன்று தினத்தந்தி பதினெட்டும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 3 பதிப்பாக வார்த்தெடுத்த தினத்தந்தியை, அவர் சிங்க மைந்தர் சிவந்தி ஆதித்தனார் 15 பதிப்புகளாக வளர்த்தெடுத்தார். மூன்றாம் தலைமுறையின் சாதனையாளர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் இந்தியாவுக்கு வெளியிலும் இப்போது தினத்தந்தியின் எல்லைகளை விரிவு செய்திருக்கிறார். தினத்தந்தியின் நீட்சி தமிழர்களின் வளர்ச்சி என்று கொண்டாடத்தக்கது. குறைந்த கல்வியறிவு கொண்ட பாமரரும் கூட இன்று பெற்றிருக்கும் அரசியல் விழிப்புக்கும் உலக அறிவுக்கும் தலையாய காரணம் தினத்தந்தி என்றால் அது தவறாகாது.

வரலாற்று பெருமை பெற்ற இலங்கையின் வீரகேசரியோடு இணைந்து தினத்தந்தி வெளிவருவது இலங்கைத் தமிழர்களுக்கு இன்பமூட்டுவதாகும். தினத்தந்தியின் புதிய உயரங்களைப் பாராட்டுகிறேன். கரை இருக்கும் எல்லைவரை அலை சென்று பாய்வதைப்போல தமிழர் இருக்கும் எல்லைதோறும் தினத்தந்தி சென்று சேர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.