சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை படமாகிறது


சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை படமாகிறது
x
தினத்தந்தி 24 Jan 2019 9:45 PM GMT (Updated: 24 Jan 2019 8:18 PM GMT)

நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் அதிகம் வருகின்றன.

நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் அதிகம் வருகின்றன. நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோர் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படங்களாகி வெளிவந்தன.

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ராஜசேகர ரெட்டி, மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படங்களாகி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது நேதாஜி என்று மக்களால் அழைக்கப்படும் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவரான சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதில் சுபாஷ் சந்திரபோஸின் இளம் வயது வாழ்க்கை, ஆயுதம் ஏந்திய போராட்டம், இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கியது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் காட்சிப் படுத்துகின்றனர். நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்ததாக ஜப்பான் வானொலி அறிவித்தது. ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையும் படத்தில் காட்சிப்படுத்துகின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் தயாராகிறது. தற்போது நடிகர்கள் தேர்வு நடக்கிறது.

Next Story