சினிமா செய்திகள்

“சைவ உணவுக்கு மாறிவிட்டேன்” -நடிகை சமந்தா + "||" + Actress Samantha has changed to vegetarianism

“சைவ உணவுக்கு மாறிவிட்டேன்” -நடிகை சமந்தா

“சைவ உணவுக்கு மாறிவிட்டேன்” -நடிகை சமந்தா
சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் இரும்புத்திரை, சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் வந்தன.
சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் இரும்புத்திரை, சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் வந்தன. தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் உள்ளன.

இந்த வருடம் வாழ்க்கையில் புதிய முடிவுகளை எடுத்து அதன்படி நடக்க இருப்பதாக சமந்தா கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போதும் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுத்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று எனது அம்மா சிறுவயதில் இருந்தே என்னிடம் கூறி இருக்கிறார். இந்த வருடம் சில நல்ல விஷயங்களை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன். உயர்ந்த எண்ணங்கள் முக்கியம். அவற்றை வளர்த்துக்கொள்வேன்.

சக மனிதர்கள் மீது இன்னும் அதிகமாக அன்பு செலுத்த முடிவு செய்துள்ளேன். எல்லா மனிதர்களுக்கும் ஆதரவாக இருப்பேன். அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். எப்போதும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவது என்று உறுதி எடுத்து அதன்படி செயல்பட ஆரம்பித்துள்ளேன். அமைதியாக வாழவும் திட்டமிட்டு உள்ளேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.