சினிமா செய்திகள்

தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன் + "||" + In Tamilnadu politics First of all,corruption should be eliminated-Kamal

தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்

தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்
தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,

சென்னையில்  கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு தக்கையாக உள்ளது, அதனை மீண்டும் முழு உருவம் பெறச்செய்வது முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் கையில் உள்ளது.

தமிழகம் முன்னேற இளைஞர்கள் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும். தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். நாற்காலி கிடைத்ததும் மக்களை புறம் தள்ளாமல் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக அரசு செயல்பட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் .

திருட்டை குறைத்தால் மக்களுக்கான தேவைகள் பூர்த்தியாகும்.

காவிரிக்காக போராடுதல் அவசியம், காவிரி தமிழகத்தில் பாய வேண்டும் என்பது இயற்கையின் நீதி. ஓட்டுக்கு லஞ்சம் வாங்க கூடாது என இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

ஓட்டுக்கான பண மதிப்பை விட வாக்குறுதிக்கு முக்கியத்துவம் அளித்தல் அவசியம்.  மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் வழங்கும்.

மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது என சொல்லிவிட முடியாது. நிலைமையை பொருத்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர் ரகுமானும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளனர்.
2. ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.
3. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 3-வது இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3-வது இடம் பிடித்துள்ளது. அ.ம.மு.க. வேட்பாளருக்கு 4-வது இடம் கிடைத்தது.
4. ஹேராம் முதல் கோட்சே வரை தொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன்
நாதுராம் கோட்சே பற்றி கருத்து சொல்லி எதிர்ப்பிலும் பிரசாரத்தில் முட்டை, செருப்பு வீச்சுகளிலும் சிக்கி உள்ளார் கமல்ஹாசன்.
5. கோட்சே குறித்த கருத்து 3 பாரதீய ஜனதா தலைவர்களுக்கு நோட்டீஸ்
கோட்சே குறித்து ஆதரித்து கருத்து கூறிய் 3 தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.