சினிமா செய்திகள்

வரலட்சுமியுடன் 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள் + "||" + 3 heroines are working together with Varalakshmi

வரலட்சுமியுடன் 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள்

வரலட்சுமியுடன் 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள்
நடிகை வரலட்சுமியுடன் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள ‘கர்ஜனை’ படத்தை டைரக்டு செய்தவர், சுந்தர் பாலு. இது, ஒரு திகில் படம். திரிஷா, அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார். அவர் எப்படி அந்த காட்டுக்குள் இருந்து தப்பி வருகிறார்? என்பதே கதை. இந்த படத்தை டைரக்டு செய்த சுந்தர் பாலு அடுத்து டைரக்டு செய்யும் புதிய படத்துக்கு, ‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா ஆகிய 3 பேரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். படத்தின் கதைப்படி, 4 பேரும் சினேகிதிகள். காதலிக்க மறுத்த பெண்ணை தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறான், ஒருவன் இதன் பின்னணியில் நடக்கும் கதை, இது.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் திரிஷா நடித்து இருக்கிறார்.

ஆரோல் கரோலி இசையமைக்கிறார். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார். கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடந்தது. படப்பிடிப்பும் அன்றே தொடங்கியது.