சினிமா செய்திகள்

என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை கங்கனா ரனாவத் + "||" + Kangana Ranaut MeToo movement; 'I was pinched on my butt'

என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை கங்கனா ரனாவத்

என்னை பின்னால் கிள்ளிவிட்டு... இப்ப என்ன செய்வ! என்பதுபோல் பார்த்த நபர்- நடிகை  கங்கனா ரனாவத்
கூட்டத்தில் சிக்கியபோது தனக்கு நடந்த கொடுமை குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மும்பை, 

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 25-ந்தேதி "மணிகார்னீகா" என்ற படம் வெளியானது. கடந்த 3 நாட்களில்  ரூ.50 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் தங்களை பாதுகாக்க தற்காப்பு கலையை கற்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் ராணி முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்.

இது குறித்து கங்கனா ரனாவத் கூறியதாவது:-

''நாம் பாதுகாப்பாக உணர அடுத்தவர்கள் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரி அல்ல. நான் 16 வயதில் அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அடுத்தவர்கள் உங்களை காப்பாற்ற வேண்டும், உங்களை பாதுகாப்பாக உணர செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பினார்.

"குற்றம் செய்பவர்கள் அது தவறு என்று தெரிந்துதான் செய்கிறார்கள். திரிலுக்காக தவறுகளை செய்கிறார்கள். நான் ஒரு கூட்டத்தின் நடுவே நின்றபோது ஒருவர் என் பின்னால் கிள்ளிவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நபர் என்னை கிள்ளிவிட்டு என் கண்களை பார்ப்பது, இப்ப என்ன செய்வ! என்பது போன்று இருந்தது. அதனால் என்ன எதிர்பார்க்க முடியும்?. நம் பாதுகாப்புக்கு அடுத்தவர்களை நம்பி இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.