சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விபத்துநடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம் + "||" + Actor Vishnu Vishal was injured in the neck

படப்பிடிப்பில் விபத்துநடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்

படப்பிடிப்பில் விபத்துநடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்
படப்பிடிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் பலத்த அடிபட்டு காயம் அடைந்தார்.
தமிழில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணுவிஷால். நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளிவந்த ‘ராட்சசன்’ படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் சண்டை காட்சியை படமாக்கினர். அதில் விஷ்ணு விஷால் நடித்தபோது கழுத்தில் பலத்த அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

விஷ்ணு விஷால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கழுத்து காயத்துக்கு சிகிச்சை எடுத்த படத்தை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

“எனக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. வலியும் அதிகமாக இருக்கிறது. கைகளிலும் வலி இருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்துள்ளேன். 4 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். விரைவில் குணமாகி விடும் என்று நம்புகிறேன். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். உங்கள் ஆசிர்வாதமும், ஆதரவும் தேவை”

இவ்வாறு விஷ்ணுவிஷால் கூறியுள்ளார்.

விஷ்ணுவிஷால் அறிமுகமான வெண்ணிலா கபடி குழு படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...