சினிமா செய்திகள்

நடிகை வித்யா உன்னி திருமணம் + "||" + Actress Vidya Unni Married

நடிகை வித்யா உன்னி திருமணம்

நடிகை வித்யா உன்னி திருமணம்
நடிகை வித்யா உன்னி திருமணம் கொச்சியில் நடந்தது.
தமிழில் ஆண்டான் அடிமை, வேதம், பாளையத்து அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னியின் தங்கை வித்யா உன்னி. இவர் மலையாளத்தில் டாக்டர் லவ், 3 ஜி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடன கலைஞராகவும் இருக்கிறார். திவ்யா உன்னி படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

அதுபோல் வித்யா உன்னியும் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகினார். தற்போது ஹாங்காங்கில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். வித்யா உன்னிக்கும், சென்னையை சேர்ந்த சஞ்சய் வெங்கடேஸ்வரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் கொச்சியில் நடந்தது. இதில் திவ்யா உன்னி கலந்துகொண்டார். நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.