சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் “என்னை புதுமையாக பார்க்கலாம்”-காஜல் அகர்வால் + "||" + Let me see you innovative -Kajal Agarwal

இந்தியன்-2 படத்தில் “என்னை புதுமையாக பார்க்கலாம்”-காஜல் அகர்வால்

இந்தியன்-2 படத்தில் “என்னை புதுமையாக பார்க்கலாம்”-காஜல் அகர்வால்
இந்தியன்-2 படத்தில் என்னை புதுமையாக பார்க்கலாம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“அனுபவம் வாய்ந்த நடிகர்-நடிகைகள் பார்வை முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மீதுதான் இருக்கும். நானும் அப்படித்தான். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இன்னும் அதிகம் படங்கள் என் கைவசம் உள்ளது. ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அதில் ஏதோ ஒரு விஷயம் ஆர்வத்தை ஏற்படுத்துகிற மாதிரி இருக்க வேண்டும். செய்கிற வேலை புதுமையாக இருக்க வேண்டும். கதைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்று பார்ப்பேன். அதற்காக கதையில் நான் வலிய சென்று மூக்கை நுழைக்க மாட்டேன். எப்போதும் வித்தியாசமான கதைகள் நம்மை தேடி வராது. எனவே வருகிற கதைகளில் வித்தியாசமானதை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.

வித்தியாசமாக செய்யும் ஆர்வத்தில் நடிப்பேன். எப்போதும் சவால் நிறைந்த பயணம் செய்வது என்பது ரொம்ப கஷ்டம். அதற்காக ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதும் கஷ்டம். இந்த இரண்டையும் சேர்த்த மாதிரி வரும் கதைகளை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் எனது பயணம் எனக்கு போரடிக்காமல் இருக்க வேண்டும். இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை புதுமையாக பார்க்கலாம்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.