சினிமா செய்திகள்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம் + "||" + Supreme Court has postponed the judgement of Ilayaraja 75 case ban

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை 

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது.

இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வருவதால் இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.  ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதில் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாடு மேய்க்க தடை விதித்ததால் சாப்டூர் வனத்துறை அலுவலகம் முற்றுகை
வனப்பகுதியில் மாடு மேய்க்க தடை விதிக்கப்பட்டதால் மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு; போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படும் நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்; டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று டாக்டர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
4. மீன்பிடி தடைகாலம் என்பதால் ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடைகாலம் என்பதால் ஈரோட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900–க்கு விற்பனை ஆனது.
5. பரமக்குடி தாலுகாவில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி நோன்பு தொழுகை நடத்துவதில் சிரமம்
பரமக்குடி தாலுகாவில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோன்பு தொழுகை நடத்துவதில் சிரமம் உள்ளதாக ஐக்கிய ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.