சினிமா செய்திகள்

ரூ.13 கோடிக்கு வீடு வாங்கிய அலியாபட் + "||" + Alia Bhatt bought a house

ரூ.13 கோடிக்கு வீடு வாங்கிய அலியாபட்

ரூ.13 கோடிக்கு வீடு வாங்கிய அலியாபட்
இந்தி நடிகை அலியாபட் மும்பை ஜூஹூ பகுதியில் ரூ.13 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார்.
இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், அலியா பட். இவர் பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் மகள். தற்போது தன்னை விட 11 வயது அதிகமான இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். கடந்த வருடம் அலியாபட் நடிப்பில் வெளியான ராஸி படம் நல்ல வசூல் குவித்தது.

தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு ரூ.7 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். மும்பையில் நிறைய காலி இடங்களை வாங்கி போட்டுள்ளார். வீடுகளிலும் முதலீடு செய்கிறார். தற்போது பிரபலங்கள் வசிக்கும் மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொகுசு வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு ரூ.7.86 கோடி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். ஆனால் அலியாபட் முதல் தளத்தில் உள்ள 2,300 சதுர அடி வீட்டை சுமார் இரண்டு மடங்கு தொகையாக ரூ.13.11 கோடி கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார். இதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.65.5 லட்சம் செலுத்தி உள்ளார். அவருக்கு இரண்டு கார் பார்க்கிங்குக்கு இடம் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் அந்த வீட்டை வாங்க விரும்பியதால் அலியாபட் அதிக தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது.