சினிமா செய்திகள்

அகோரியாக நடித்த அனுபவம் -நடிகர் ஜாக்கி ஷராப் + "||" + Acted as Agori Experience - Actor Jackie Sharap

அகோரியாக நடித்த அனுபவம் -நடிகர் ஜாக்கி ஷராப்

அகோரியாக நடித்த அனுபவம் -நடிகர் ஜாக்கி ஷராப்
கஸ்தூரி ராஜா இயக்கும் பாண்டி முனி படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் அகோரி வேடத்தில் நடித்து வருகிறார்.
பாண்டி முனி படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றி ஜாக்கி ஷராப் கூறியதாவது:-

“பாண்டி முனி கதையை டைரக்டர் கஸ்தூரிராஜா சொன்னதும் பிடித்துப் போனது. இது எனக்கு புது மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்பதை உணர்ந்து நடிக்க சம்மதித்தேன். ஆரண்ய காண்டம் படத்தில் நான் நடித்த மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல, என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே மாற்றும் படமாக இது இருக்கும்.

டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை கனவு படமாக சுமந்து கொண்டிருக்கிறார். நான் சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டியம்மா என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.

அகோரி என்றால் ஆ...ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் வேடமல்ல. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம். எனக்கே இது புது வேடம் தான். சிறப்பாக நடித்து இருப்பதாக உணர்கிறேன்.”

இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்.