ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக படுக்கைக்கு அழைத்தவர்களை விளாசிய நடிகை
நான் விற்பனைக்கு உரியவள் அல்ல என்று நடிகை சாக்ஷி சவுத்ரி கூறியுள்ளார்.
நடிகைகளின் முகநூல் பக்கத்தில் ரசிகர்கள் ஆபாச கருத்துக்கள் பதிவிடுவது தொடர்கிறது. சிலர் மோசமான வார்த்தைகளால் வர்ணிக்கின்றனர். இன்னும் சிலர் படுக்கைக்கு அழைக்கின்றனர். சமீபத்தில் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரை படுக்கைக்கு அழைத்து இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒருவர் கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி அருண், “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். வாலிபரின் பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வைரலானது.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை சாக்ஷி சவுத்ரிக்கும் இதுபோல் ஆபாச அழைப்பு வந்துள்ளது. இவர் தமிழில் ஆயிரத்தில் இருவர் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் நா பெல்லம் ஜேம்ஸ்பாண்ட், செல்பி ராஜா, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மேக்னட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாக்ஷி சவுத்ரி வலைத்தளங்களில் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
இதனால் அவருக்கு மோசமான வார்த்தைகளுடன் பாலியல் அழைப்புகள் வருகின்றன. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story