சினிமா செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு “நான் மீண்டும் நடிக்கிறேன்” - நடிகை சோனாலி பிந்த்ரே + "||" + After cancer treatment I am acting again Actress Sonali Bendre

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு “நான் மீண்டும் நடிக்கிறேன்” - நடிகை சோனாலி பிந்த்ரே

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு “நான் மீண்டும் நடிக்கிறேன்” - நடிகை சோனாலி பிந்த்ரே
தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சோனாலி பிந்த்ரே ‘பம்பாய்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.
இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டார்.

சிகிச்சை குறித்து அவர் கூறும்போது, “கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும் வலியை உணர்ந்தேன். கீமோதெரபிக்கு பிறகு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த நாட்கள் மிகவும் துயரமானது. உடலில் தொடங்கிய வலி மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது” என்றார்.


2 மாதங்களுக்கு முன்னால் குணமடைந்து நாடு திரும்பினார். இதுகுறித்து அவரது கணவர் கோல்டி பெல் கூறும்போது, “சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் சிகிச்சை முடிந்துள்ளது. நோய் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளதால் அடிக்கடி சோதனைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும்” என்றார்.

சில வாரங்கள் வீட்டில் ஓய்வு எடுத்த சோனாலி பிந்த்ரே மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது விளம்பர படமொன்றில் நடிக்கிறார். விரைவில் இந்தி படத்திலும் நடிக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நீண்ட ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்பு அரங்குக்கு திரும்பி இருக்கிறேன். மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சி யாக இருக்கிறது” என்றார். மீண்டும் நடிக்கும் சோனாலி பிந்த்ரேவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.