சினிமா செய்திகள்

பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை + "||" + Telugu TV Actress Found Hanging, Was On Phone With Man Before Death Cops

பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை
பிரபல தெலுங்கு டிவி நடிகை ஜான்சி தற்கொலை செய்துக்கொண்டது தெலுங்கு நடிகர்-நடிகைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத்,

ஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட நேரமாக வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அவருடைய சகோதரன் கதவை திறக்ககோரியும் பதில் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜான்சி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜான்சியின் கைப்பேசியை கைப்பற்றிய போலீஸ் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஜான்சி உயிரிழப்பதற்கு முன்னதாக நீண்ட நேரமாக ஆண் ஒருவருடன் மொபைல் ஷாட் செய்து வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருடன் 6 மாதங்களுக்கு முன்பாக ஜான்சிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ஜான்சியின் மொபைலை பறிமுதல் செய்த போலீசார் தகவல்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
 
இதற்கிடையே சம்பந்தப்பட்ட நபருடன் ஜான்சி பழகிவந்ததை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்  கூறப்படுகிறது.