சினிமா செய்திகள்

விஷாலுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகி! + "||" + Vishal couple joined Heroine

விஷாலுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகி!

விஷாலுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்த கதாநாயகி!
விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷாலுடன் ‘கத்தி சண்டை’ படத்தில் முதன்முதலாக தமன்னா ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் விஷால் நடிக்கும் இன்னொரு புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்த படத்தை சுந்தர் சி. டைரக்டு செய்கிறார். ‘ஆம்பள’ படத்துக்குப்பின், விஷால்-சுந்தர்சி. இருவரும் இணைந்து பணிபுரியும் படம், இது. படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

விஷால் இப்போது வெங்கட் மோகன் டைரக்‌ஷனில், ‘அயோக்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இம்மாதத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும். அதைத்தொடர்ந்து சுந்தர் சி. டைரக்‌ஷனில், விஷால்-தமன்னா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.