சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் + "||" + Vijay Sethupathi is the new film

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை லலித்குமார் தயாரிக்கிறார்.
கடந்த ஆண்டில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம், 96. அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் லலித்குமார் வெளியிட்டு இருந்தார். அடுத்து இவர், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் கதை, திரைக்கதை எழுதி டெல்லி பிரசாத் தீனதயாள் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். இவர் டைரக்டர்கள் கிருஷ்ணா, பாலாஜி தரணிதரன், பிரேம்குமார் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,’ ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியிருக்கிறார். 96 படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் மற்றும் இயக்குனர் விஜய் சந்தர் டைரக்‌ஷனில் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து லலித்குமார் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது.