சினிமா செய்திகள்

ரூ.38 கோடிக்கு வீடு : நடிகர் ராம்சரணுக்கு ரூ.1,300 கோடி சொத்து + "||" + House for Rs 38 crore: Actor Ramcharan has assets worth Rs 1,300 crore

ரூ.38 கோடிக்கு வீடு : நடிகர் ராம்சரணுக்கு ரூ.1,300 கோடி சொத்து

ரூ.38 கோடிக்கு வீடு : நடிகர் ராம்சரணுக்கு ரூ.1,300 கோடி சொத்து
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம்சரண். இவர் 2007-ல் தெலுங்கில் வெளியான ‘சிறுத்த’ படத்தில் அறிமுகமானார். அடுத்து அவர் நடித்த ‘மகதீரா’ படம் வசூல் சாதனை நிகழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்தியது.
‘மகதீரா’ படத்தில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வாலுக்கும் முன்னணி நடிகையாக அடித்தளம் அமைத்தது.

இந்த படத்தை தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியிட்டனர். அதன்பிறகு ராம்சரணுக்கு தெலுங்கில் படங்கள் குவிய மளமளவென உயர்ந்தார். ஆரஞ்ச், ரச்சா, நாயக், எவடு என்று அவர் நடித்த அனைத்து படங்களும் வரவேற்பு பெற்றன. தற்போது சிரஞ்சீவி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.

பாகுபலி படத்தை இயக்கி பிரபலமான ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்திலும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார். ராம்சரண் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.1,300 கோடி சொத்து உள்ளதாகவும் இதன்மூலம் தெலுங்கில் அதிக சொத்து வைத்துள்ள நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத் ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் ராம்சரண் ரூ.38 கோடி செலவில் புதிதாக சொகுசு வீடும் கட்டி இருக்கிறார். தென்னிந்திய பிரபலங்களில் அதிக செலவில் கட்டப்பட்டுள்ள வீடாக இது மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...