சினிமா செய்திகள்

“எனக்கும் ஒரு காதல் இருக்கிறது” பட விழாவில் பார்த்திபன் பேச்சு + "||" + Parthiban talks in the film festival There is a love for me

“எனக்கும் ஒரு காதல் இருக்கிறது” பட விழாவில் பார்த்திபன் பேச்சு

“எனக்கும் ஒரு காதல் இருக்கிறது” பட விழாவில் பார்த்திபன் பேச்சு
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘96’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:-
“கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதுபோல, காதலை நம்பியவர்களும் கைவிடப்படார். 96 படத்தை நான் பார்த்தேன். காதலர்கள் எப்போது ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பார்கள் என்ற தவிப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர்.

காதலிப்பதற்கு காதலியோ காதலரோ தேவையில்லை. காதல் மட்டும் இருந்தால் போதும். எல்லோரது மனதிலும் தெய்வீக காதல் இருக்கிறது. எனக்கும் ஒரு காதல் இருந்தது. இருக்கிறது. பேசி பல வருடங்களாகி விட்டது. ஆனாலும் இப்போது அவர், போனில் தொடர்பு கொண்டு உங்களை சந்திக்கலாமா? என்று சொல்லி விடக் கூடாதே என்ற தவிப்பு இருக்கிறது.

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் திமிர் இருக்கும். திமிரோடுதான் படத்தை பார்ப்பார்கள். அப்படி திமிருடன் படம் பார்த்தவர்களையெல்லாம் தலையில் தட்டி படம் என்றால் இதுதான் என்று சொல்லவைத்தது ‘96’ படம்.

மக்களுக்கு பிடித்தவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த காலத்தில் எம்.கே.டி. தியாகராஜபாகவதர் என்ற சூப்பர் ஸ்டார் இருந்தார். அவருக்கு பெண்களிடம் வரவேற்பு இருந்தது. அதே வரவேற்பு இப்போது விஜய் சேதுபதிக்கும் இருக்கிறது.

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

விழாவில் விஜய் சேதுபதி, திருமுருகன் காந்தி, திரிஷா, டைரக்டர் பிரேம்குமார் ஆகியோரும் பேசினார்கள்.