புற்றுநோயில் சிக்கியவர்கள் யோகா, தியானம் செய்ய வேண்டும் - மனிஷா கொய்ராலா


புற்றுநோயில் சிக்கியவர்கள் யோகா, தியானம் செய்ய வேண்டும் - மனிஷா கொய்ராலா
x
தினத்தந்தி 6 Feb 2019 11:45 PM GMT (Updated: 6 Feb 2019 5:43 PM GMT)

தமிழில் முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

புற்றுநோயில் சிக்கி மீண்ட அனுபவம் குறித்து மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் இந்த நோயில் சிக்கி மீண்டவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க தேடினேன். ஆனால் அந்த நோய்க்கு ஆளான யாருமே தங்கள் அனுபவங்களை சொல்லவில்லை என்பது தெரிந்தது. இதனால்தான் குணமானதும் எனது அனுபவத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை புத்தகமாக எழுதினேன்.

ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து மீள்வது கடினமானது என்றாலும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். புற்றுநோயில் இருந்து குணமான பிறகும் கூட 3 ஆண்டுகளில் அது மீண்டும் வரலாம் என்பதால் நிம்மதி இருக்காது.

புற்றுநோயில் சிக்கியதும் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்க கூடாது. முறையான சிகிச்சை எடுத்து நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் குணமடையலாம். மருத்துவர் ஆலோசனைப்படி நடக்கவேண்டும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல் சரியான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். யோகா, தியானம் செய்தால் மன அழுத்தம் குறையும்.”

இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.

Next Story