சினிமா செய்திகள்

சின்னத்தம்பி யானை விவகாரம்: நடிகர் பிரபு கருத்து + "||" + Chinnathampi elephant affair: actor Prabhu commented

சின்னத்தம்பி யானை விவகாரம்: நடிகர் பிரபு கருத்து

சின்னத்தம்பி யானை விவகாரம்: நடிகர் பிரபு கருத்து
சின்னத்தம்பி யானையை வனத்தில் இருக்கும் அதனுடையை குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் பிரபு கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“விக்ரம் பிரபு நடித்த கும்கி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் ஒரு தந்தம் ரஜினி இன்னொரு தந்தம் கமல் என்றும் அந்த தந்தத்தில் விக்ரம் பிரபு ஏறிக்கொண்டு இருக்கிறார் என்றும் பேசினார்கள்.

எனக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநாயகர்தான் இஷ்ட தெய்வம். கும்கி யானை சின்னத்தம்பியை துரத்தாமல் அதோடு நட்பாகி இருக்கிறது என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்தம்பி யானையால் யாருடைய உயிருக்கும் சேதம் இல்லை என்று நான் கேள்விப்பட்டேன். வன அதிகாரியும், ‘சின்னத்தம்பி யானை உக்கிரமாக இல்லை, யாரையும் அது தாக்காது’ என்று கூறியிருக்கிறார்.

எனவே சின்னத்தம்பி யானை வனத்தில் அதன் குடும்பத்தோடு சேர அனுப்பி வைப்பதே நல்லது என்று கருதுகிறேன். சின்னத்தம்பி என்ற படத்தில் நான் நடித்து இருக்கிறேன். அதே மாதிரி கும்கி படத்தில் எனது மகன் விக்ரம் பிரபு நடித்துள்ளார். எனவே சின்னத்தம்பி யானையை இருந்த இடத்துக்கே அனுப்பிவிட்டால் சந்தோஷப்படுவேன். அதுதான் எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

இவ்வாறு பிரபு கூறினார்.