சினிமா செய்திகள்

‘3-டி’யில் தயாராகும் நடன படத்தில் பிரபுதேவா + "||" + 3-D is ready Prabhu Deva in the dance

‘3-டி’யில் தயாராகும் நடன படத்தில் பிரபுதேவா

‘3-டி’யில் தயாராகும் நடன படத்தில் பிரபுதேவா
ஹாலிவுட்டில் நடனத்தை மையப்படுத்தி அதிக படங்கள் வெளியாகி வசூல் குவிக்கின்றன. தற்போது இந்தியாவிலும் இதுபோன்ற நடன படங்கள் பக்கம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.
 சமீபத்தில் தமிழில் லட்சுமி என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார்.

இந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோஸா இயக்கி வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தமிழிலும் இதை மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து ரெமோ டிசோஸா ‘ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற புதிய நடன படமொன்றை இயக்குகிறார்.


இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இவர் தமிழில் ‘கப்பல்’ என்ற படத்தில் நடித்தவர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. லண்டனிலும் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள்.

இதுவரை இந்தியாவில் வெளியான நடன படங்களை விட அதிக செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். 3-டியில் இது உருவாகிறது. வருண் தவான் கூறும்போது, “பிரபுதேவாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது” என்றார். இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...