சினிமா செய்திகள்

ஜெய், ஆரவ்வுடன் காதலில் விழுந்த அஞ்சலி, ஓவியா? + "||" + Jai, with Arrow In Love Anjali Oviya

ஜெய், ஆரவ்வுடன் காதலில் விழுந்த அஞ்சலி, ஓவியா?

ஜெய், ஆரவ்வுடன் காதலில் விழுந்த அஞ்சலி, ஓவியா?
நடிகர் ஜெய்யை அஞ்சலியும், ஆரவ்வை ஓவியாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன.
அஞ்சலிக்கு 32 வயது ஆகிறது. 2007-ல் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அவருக்கு அங்காடி தெரு படம் திருப்புமுனையாக அமைய தொடர்ந்து தமிழ் படங்களிலும், தெலுங்கிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.


‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் பரவ அதை மறுத்தனர். ஆனாலும் இருவரையும் இணைத்து பேசுவது தொடர்கிறது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அஞ்சலி, “நான் ஜெய்யை பற்றி எப்போதுமே பேசியது இல்லை. ஆனாலும் எங்களுக்குள் காதல் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். அடிப்படை இல்லாத விஷயங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார். அஞ்சலி மறுத்தாலும் இருவரும் காதலிப்பது உண்மை என்கின்றனர் தெலுங்கு பட உலகினர்.

2010-ல் களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமானார். இதில் சக போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. பிக்பாஸ் அரங்கில் இருவரும் முத்தமிட்டதாகவும் கூறப்பட்டது.

அதன்பிறகு ஓவியாவை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் விலக, வேதனையில் ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். இப்போது மீண்டும் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ஓவியா “நாங்கள் நல்ல புரிதலில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறோம் என்பது தவறு” என்றார்.