சினிமா செய்திகள்

‘குருதி ஆட்டம்’ படத்தில் அஜித் ரசிகராக அதர்வா + "||" + Atharva as Ajith fan

‘குருதி ஆட்டம்’ படத்தில் அஜித் ரசிகராக அதர்வா

‘குருதி ஆட்டம்’ படத்தில் அஜித் ரசிகராக அதர்வா
அஜித்குமாரின் தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில், எந்தவித பின்புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர், நடிகர் அஜித்குமார். கடுமையான உழைப்பால் குறுகிய காலத்தில், அவர் உச்ச நடிகர்களில் ஒருவராக பிரபலமானார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்களால், ‘‘தல’’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவ்வாறு அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர ரசிகர் ஒருவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘குருதி ஆட்டம்’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது.

அஜித்குமாரின் தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஸ்ரீ கணேஷ் டைரக்டு செய்கிறார். இவர், ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘ஒரு உச்ச நடிகரின் ரசிகரை பிரதான கதாபாத்திரமாக வைத்து, இதற்கு முன்பு சில படங்கள் வந்துள்ளன. இந்த படத்தின் நாயகன் அஜித்குமார் ரசிகராக வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தை அதர்வாவிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

கதைப்படி, அதர்வா கபடி வீரர். அஜித்குமாரின் தீவிர ரசிகர். அவர் ஆடுகிற ஆட்டம்தான், குருதி ஆட்டம். கதாநாயகி பிரியா பவனி சங்கரின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. த.முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும்.’’

ஆசிரியரின் தேர்வுகள்...